டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுவகைகளை விரைவில் அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு!

Dina AthibAn
0

டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுவகைகளை விரைவில் அறிமுகப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பிற மாநிலங்களில் இருந்து 54 புதிய உயர் ரக மதுபானங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தை டாஸ்மாக் நிர்வாகம் வகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தரமான மதுவகைகளை விற்பனை செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அனுமதிகளை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "வெளிமாநிலங்களில் இருந்து தரமான வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்துவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கிடைக்காத பல்வேறு பிராண்ட் பீர் மற்றும் இதர மதுபான வகைகள் நுகர்வோருக்குக் கிடைக்கும். தற்போது சுமார் 100 பிராண்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், அதில் குறிப்பிட்ட சில மட்டுமே வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளன. எனவே, நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப 54 புதிய பிராண்டுகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன; இதற்கான இறுதி ஒப்புதல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!