நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி: இந்திய ரயில்வேயில் புதிய வரலாறு!
இந்திய ரயில்வே துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு, வடக்கு மண்டல ரயில்வே மூலம் ரூ.136 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா நிறுவனத்திற்கு இதன் டெண்டர் வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக இந்த அதிநவீன ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) முழுமையாக வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத இந்த ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலத்தின் மின்மயமாக்கப்படாத 89 கி.மீ.
ஜிந்த் ரயில் நிலையத்தில் நடைபெறும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வோடு சேர்த்து, ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ.14,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார். அதே வேளையில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் புதுப்பிக்கப்பட்ட சென்னை பூங்கா, சின்னசேலம், குன்னூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்கள் உட்பட, நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்களைப் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

AthibAn Tv